< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு குறித்த பயிற்சி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
24 March 2023 8:26 PM GMT

விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு குறித்த பயிற்சி

திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் அட்மா திட்டத்தில் உழவன் செயலி பயன்பாடு குறித்த பயிற்சி திட்டச்சேரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி வரவேற்றார். இதில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உழவன் செயலி பயன்பாடு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் வேளாண் கல்வி நிறுவன மாணவர்கள் கலந்து கொண்டு விதை நேர்த்தி மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு காண்பித்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்