< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு உளுந்து விதைப்பு குறித்து பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு உளுந்து விதைப்பு குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
3 March 2023 7:10 PM GMT

விவசாயிகளுக்கு உளுந்து விதைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உளுந்து விதைப்பு பற்றி நேரடியாக விவசாய நிலங்களில் நடந்த பயிற்சியில், உளுந்து பயிரிடுவதற்கு முன்பு விளை நிலங்களை நன்கு சீர் செய்து இயற்கை உரமான எரு முதலியவற்றை வயலுக்கு ஏக்கருக்கு 5 டன் முதல் 10 டன் வரையில் மண்ணின் தரத்திற்கு ஏற்றாற்போல் இயற்கை உரம் இடலாம். உயிர் உரங்கள் தாவரங்களின் மற்றும் மண்ணின் தன்மை மற்றும் விளைச்சலை மேம்படுத்துகின்றன. அவை நோய்க்கிருமிகள் வளர அனுமதிக்காது. உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் என்பதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்கிறது. அவை தாவர நோய்களை ஏற்படுத்தும். மண்ணில் உள்ள பல தீங்கு விளைவிக்கும் பொருட்களை அழிக்கின்றன. வறண்ட நிலையில் கூட உயிர் உரங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் சவுமியா மற்றும் துணை வேளாண் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்