< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
25 March 2023 6:45 PM GMT

ரிஷிவந்தியம் அருகே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையில் அட்மா திட்டத்தின் கீழ் பாசார் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு சிறப்புபயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயாபழனி சுப்பிரமணியம், துணைத்தலைவர் அமிர்தம் தணிகைமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் மானிய திட்டம் குறித்து வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன், சிறுதானியங்கள் பயிர் சாகுபடி குறித்து உதவி வேளாண்மை அலுவலர் வேலு, அட்மா திட்டங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி ஆகியோர் விளக்கி கூறினர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்