< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
|19 Jan 2023 11:43 PM IST
கொடைக்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு கல்லூரி மாணவர்கள் பயிற்சியளித்தனர்.
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கும், விவசாய பெண்களுக்கும் பஞ்சகாவ்யா மற்றும் தசக்காவ்யா தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் முறை போன்றவற்றை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.