< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
தேனி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
16 Dec 2022 12:30 AM IST

தேனியில் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேனி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் லட்சுமிபுரத்தில் முன்னோடி விவசாயி குமார் கரும்பு தோட்டத்துக்கும், வைகை அணையில் உள்ள சர்க்கரை ஆலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், நவீன கரும்பு அறுவடை எந்திரம், மகசூலை அதிகரிக்கும் யுக்திகள் போன்றவை குறித்து வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்