< Back
மாநில செய்திகள்
அங்கக பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அங்கக பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
30 Aug 2023 12:42 AM IST

அங்கக பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வேளாண்மை அலுவலகத்தில் அங்கக பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் தலைமை தாங்கினார். பயிற்சியில் விதைச்சான்று உதவி இயக்குனர் தெய்வீகன், வேளாண் அலுவலர் சபாபதி, வட்டார வேளாண் அலுவலர் ரமேஷ், துணை வேளாண் அலுவலர் தமிழரசன் ஆகியோர் அங்கக விவசாயத்தின் அவசியம், வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டம், அங்கக விவசாய குழுக்கள் அமைத்து அதனை பதிவு செய்யும் முறைகள், பஞ்சகாவியா, மூலிகை கரைசல், அமிர்த கரைசல், பூச்சி விரட்டி தயாரிப்பு மற்றும் வேளாண்மை துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினர். பயிற்சியில் தழுதாழை, தொண்டப்பாடி, பெரியம்மாபாளையம், பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்