< Back
மாநில செய்திகள்
மரவள்ளி கிழங்கு சாகுபடியில் டிரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மரவள்ளி கிழங்கு சாகுபடியில் டிரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
9 Sept 2023 12:16 AM IST

மரவள்ளி கிழங்கு சாகுபடியில் டிரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவட்டார்,

மரவள்ளி கிழங்கு சாகுபடியில் டிரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி

குமரி மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் மரவள்ளி சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் தலைமையில் நாகர்கோவிலில் கருத்தரங்கம் நடைபெற்றது. 2-வது நாள் திருவட்டார் வட்டாரத்தில் பொன்மனை கிராமத்தில் டிரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மரவள்ளி பயிருக்கு டிரோன் மூலம் நுண்ணூட்டச்சத்து தெளித்தல் குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது. இதில் திருவனந்தபுரம், மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜெகநாதன், முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் ஆகியோர் செயல்விளக்கம் காட்டினர்.

நிகழ்ச்சியில் முன்சிறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அப்ரோஸ் பேகம், மேல்புறம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆஸ்லின் ஜோஷி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவட்டார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் எஸ்.என்.திலீப் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்