< Back
மாநில செய்திகள்
டிரோன் மூலம் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

டிரோன் மூலம் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
5 July 2022 10:59 PM IST

நீடாமங்கலம் பகுதியில் டிரோன் மூலம் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் டிரோன் மூலம் உரமிடுதல் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முதலாவதாக நானோ யூரியா மேல் உரமாக நெல் வயலில் எவ்வாறு தெளிப்பது என்பது குறித்து டிரோன் மூலமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவதாக யூரியா மற்றும் பொட்டாஷ் மேல் உரத்திற்கு மாற்றாக இப்கோ நானோ யூரியா திரவம் 500 மி.லி. மற்றும் இப்கோ சாகரிகா கடல்பாசி திரவம் 500 மி.லி. ஆகிய இரண்டையும் கலந்து நெல் வயலில் டிரோன் மூலமாக தெளித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு திரவ வடிவிலான உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் யூரியா மற்றும் பொட்டாஷ் மேல் உரத்திற்கான ஆகும் செலவு பாதியாக குறைய வாய்ப்பு உள்ளது என்று கள அலுவலர்கள் தெரிவித்தனர். இதில், இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர்களான பொம்மண்ணன் (திருவாரூர்) மற்றும் சரவணன் (தஞ்சாவூர்) மற்றும் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் கருணாகரன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்