< Back
மாநில செய்திகள்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

தினத்தந்தி
|
11 Aug 2023 6:45 PM GMT

ஆசிரியர் தேர்வாணையத்தின் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

ஆசிரியர் தேர்வாணையத்தின் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணியிடம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்டத்தின் படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலி பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலி பணியிடங்களுக்கும் நடப்பாண்டில் போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்றவை பொதுவாக உள்ளதால் இப்பாடங்களுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

இப்போட்டி தேர்வுக்கான அறிமுக வகுப்பு வருகிற 18-ந் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களால் ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் நடத்தப்பட உள்ளது. பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளத்தில் அனைத்துவிதமான போட்டி தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதலில் வரும் 1000 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்