திருவாரூர்
விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது
|விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது; தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
திருவாரூரில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ரவி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர்கள் ரமேஷ், அறிவடைநம்பி ஆகியோர் தேர்தல் ஆணையராக செயல்பட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் சண்முகவடிவேல், பொருளாளர் முருகானந்தம், துணைத்தலைவர்கள் சோமசுந்தரம், தமிழ்செல்வன், துணை செயலாளர்கள் அன்பழகன், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எண்ணும், எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது. எண்ணும், எழுத்தும் திட்டத்தில் 3-ம் தரப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.