< Back
மாநில செய்திகள்
28-ந் தேதி ஆடு, கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்
கரூர்
மாநில செய்திகள்

28-ந் தேதி ஆடு, கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:00 AM IST

ஆடு, கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் 28-ந் தேதி நடக்கிறது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில், ஆடு மற்றும் கோழி வளர்ப்பில் முக்கிய பங்களிக்கும் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்வது, பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கி கடன் உதவி, பண்ணைக்கான காப்பீடு, பண்ணை பொருளாதாரம் போன்ற தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்