< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
நவீன கருவிகளை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம்
|10 Aug 2023 5:48 PM IST
நவீன கருவிகளை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்களுக்கான பணிப்பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் இயக்குனர் சித்ரா, திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா அனைவரையும் வரவேற்றார்.
இதில் பங்கேற்றவர்களுக்கு கழிவுநீர் வாகனங்களை பயன்படுத்தி எவ்வாறு கழிவுகளை அகற்றுவது என்பது குறித்தும், நவீன கருவிகளை பயன்படுத்தி எப்படி கழிவுகளை அகற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.