திருவண்ணாமலை
மகளிர் உரிமைத்தொகை தேர்வுக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
|கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் மகளிர் உரிமைத்தொகை தேர்வுக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்குவது, பூர்த்தி செய்வது தொடர்பான இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தாசில்தார் சாப்ஜான் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வம், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய இல்லம் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள 216 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் கீழ்பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகரன், பிரவீன்குமார், ஜெகதீசன் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.