< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
|7 Oct 2023 12:39 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சிகளின் மதுரை மண்டல இயக்ககம் சார்பாக தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் பயிற்சி முகாம் காரியாபட்டியில் நடைபெற்றது. காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பயிற்சி கையேடுகளை வழங்கி பேசினார். பயிற்சி முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அன்பழகன், ஜீலன் பானு, நகர்புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் வாசுமதி, சுகாதார ஆய்வாளர் முருகானந்தன் ஆகியோர் தூய்மை பணிகளுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் திரளான பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.