< Back
மாநில செய்திகள்
சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார் நிறைமதி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வரவேற்றார். தேர்தல் துணை தாசில்தார் பசுபதி கலந்து கொண்டு வாக்குசசாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, தெளிவான புகைப்படங்களை வாங்குவது, 70-80 வயது உள்ள வாக்காளர்களை கணக்கெடுத்து அவர்களது வாக்குகளை அஞ்சல் மூலமாக அனுப்புவது குறித்தும் விளக்கி பயிற்சியளிக்கப்பட்டது. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்