< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சுகாதார ஊக்குனர்களுக்கு பயிற்சி முகாம்
|12 Oct 2023 1:22 AM IST
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் சுகாதார ஊக்குனர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் சுகாதார ஊக்குனர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு முன்னிலை வகித்தார். வீடுகள் தோறும் சுகாதாரத்தை வலியுறுத்தியும், வீடுகளில் தனி நபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக 48 ஊராட்சிகளிலும் உள்ள சுகாதார ஊக்குனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுவதன் அவசியம் தொடர்பாகவும், தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளை கணக்கெடுக்கும் பணியை நடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.