< Back
மாநில செய்திகள்
வக்கீல்களுக்கான பயிற்சி முகாம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வக்கீல்களுக்கான பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

திருவாடானை கோர்ட்டில் வக்கீல்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

தொண்டி

திருவாடானை கோர்ட்டில் வக்கீலுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மாவட்ட சார்பு நீதிபதி பரணிதரன் தலைமை தாங்கினார்.வக்கீல் சங்கத்தலைவர் கணேச பிரபு அனைவரையும் வரவேற்றார். தேவகோட்டை நீதிமன்ற அரசு வக்கீல் செந்தில் வேலவன் வக்கீல்களுக்கு சட்டம் குறித்த பயிற்சி அளித்தார். இதில் திருவாடானை நீதிமன்ற நீதிபதிகள் பிரசாத், மணீஸ் குமார், மாவட்ட அரசு வக்கீல் கார்த்திகேயன், மற்றும் ஏராளமான வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் சங்க செயலாளர் ஆதியாகுடி சுரேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்