ராமநாதபுரம்
நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
|த.மு.மு.க. சார்பில் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் ராமநாதபுரம் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய செயலாளர் இமாம் அலிகான் சதகி, வரவேற்றார். ம.ம.க. தலைமை பிரதிநிதி ஹுசைன் கனி, த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் செட், மண்டல செயலாளர் காதர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான், முஜிபுர் ரஹ்மான், தாஹாபுகாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முகாமில் பா.ம.க. மாவட்ட செயலாளர் நஜப்பூர் ரகுமான், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.சமூக நீதி மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஹபிப் ரகுமான் நன்றி கூறினார்.