கிருஷ்ணகிரி
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
|காவேரிப்பட்டணத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் சந்தோசம் தலைமை தாங்கினார். வாட்டார மேற்பார்வையாளர் பரிமளா வரவேற்று பேசினார். மக்கள் உதவி திட்ட அலுவலர்கள் பழனி, கணேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை கெலமங்கலம் உள்ளிட்ட வட்டாரா வளர்ச்சி அலுவகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்ப்பட்ட படித்த இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் இருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.