< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம்
|9 Oct 2023 12:15 AM IST
நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம் 12-ந் தேதி நடக்கிறது.
நாமக்கல்லில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் - திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற 12-ந் தேதி லாபகரமான கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்கிற தலைப்பில் பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அன்று காலை 11 மணி அளவில் தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.