< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

தினத்தந்தி
|
19 March 2023 6:45 PM GMT

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெற்றது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம வங்கி உதவி மேலாளர் ஜோஸ்லின் மஹி, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நேரு யுகேந்திரா தலைவர் பிரவீன் குமார் கலந்து கொண்டார். பெண்களுக்கான இந்த இலவச தையல் பயிற்சி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சிறந்த முறையில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார், உறுப்பினர்கள் சுரேஷ், கண்ணன், வேலவன், முத்து, சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்