< Back
மாநில செய்திகள்
சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு பயிற்சி

தினத்தந்தி
|
9 March 2023 6:45 PM GMT

சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் மத்திய அரசு சார்பில் தொழிலுக்காக வழங்கப்படும் எளிய கடனுதவி திட்டங்கள் மற்றும் ஆற்றல் தணிக்கை, ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறை, தொழில் வணிகத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துகுருபாக்கியம், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர் சரவணமுருகன் வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், திட்ட மேலாளர் சரவணகணேஷ், இளநிலை பொறியாளர் சேதுராமன் ஆகியோர் பேசினர். அப்போது ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்டத்தின் அடிப்படை நோக்கம், இன்றைய காலத்தில் இத்திட்டம் அனைத்து ஆலை மற்றும் நிறுவனங்களில் செயல்படுத்தப்படுவதன் அவசியம், விசைத்தறி கூடங்களில் உள்ள மின் மோட்டார் மற்றும் ஆலைகளில் உள்ள எந்திரங்களில் பிரத்யேகமான மீட்டர் பொருத்தி எந்திரத்தின் தேய்மானம் மற்றும் மின் நுகர்வு குறித்த அளவீடு செய்தல், சரியான கெப்பாசிட்டர் மூலம் மின் விரயம் ஆகுதல் மற்றும் மின்சார வாரியத்தில் இருந்து வரும் அபராதத்தை தடுக்கும் முறைகள், வெப்ப நிலையை சமப்படுத்துதல் மூலம் மின் ஆற்றலை சேமிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழிமுறைகளை பின்பற்றுதல் மூலமாக 15 முதல் 20 சதவீதம் வரை மின்சார ஆற்றலை சேமிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்