< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி

தினத்தந்தி
|
25 Feb 2023 6:45 PM GMT

விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாக தொடர்பான விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கரன் மணியன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் தமிழ் அகராதி பருத்தி ரககங்கள் தேர்வு பற்றியும், விதை நேர்த்தி பற்றியும் எடுத்து கூறினார். வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரன் மணியன் கூறுகையில், பருத்திப்பயிர் வாணிப பயிர் வகையை சேர்ந்த பயிராக இருப்பதால் விவசாயிகள் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நிர்வாக முறையை கடைப்பிடிப்பதன் மூலம் செலவினை குறைத்து அதிக லாபம் பெறலாம். விளைவித்த பொருட்களை இ.நாம் போன்ற நவீன விற்பனை முறைகளை கையாண்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு திட்டங்களின் கீழ் உயிர் உரங்கள், பருத்தி நுண்ணூட்ட கலவை, பண்ணை கருவிகள் தொகுப்பு, அங்கக உரங்கள் முதலியவற்றை விவசாயிகளுக்கு வினியோகம் செய்தார். பயிற்சிக்கு திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை அட்மா திட்ட மேலாளர் முனியசாமி மெய்விழி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்