< Back
மாநில செய்திகள்
சிறு தானிய சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சிறு தானிய சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
31 Dec 2022 6:45 PM GMT

சிறு தானிய சாகுபடி விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்ட விதை, அங்கக சான்று துறை, கமுதி வேளாண் வட்டாரம் சார்பில் சிறு தானிய சாகுபடி விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி நடந்தது. கமுதி அருகே கீழராமநதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கீழராமநதி ஊராட்சி தலைவர் பழனிஅழகர்சாமி தலைமை தாங்கினார். பயிற்சியை தொடங்கி வைத்து விதை, அங்கக சான்று உதவி இயக்குனர் சிவகாமி பேசுகையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, தினை ஆகிய சிறு தானியங்கள் பாரம்பரிய உணவாக இருந்தன. இவற்றின் சாகுபடி, கடந்த 20 ஆண்டுகளாக பெருமளவு குறைந்து ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்படும் அரிய வகை பயிர்களாக மாறிவிட்டன. இதன் பயன்பாடுகளை உணர்ந்து அதிகளவில் பயிரிட விதைப்பண்ணை அமைக்க வேண்டும். சிறு தானியங்களை மதிப்பு கூட்டிய உணவாக மாற்றி உணவில் சேர்த்து ஆரோக்கியம் பேண வேண்டும் என்றார்.

இதையடுத்து விதைச்சான்று அலுவலர் சீராளன், வேளாண் அலுவலர் வீரபாண்டி, கமுதி வேளாண் உதவி இயக்குனர் சிவராணி ஆகியோர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை கமுதி உதவி விதை அலுவலர் சரவணன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்