< Back
மாநில செய்திகள்
முதன்மை தேர்வுக்கு வழிகாட்டும் பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

முதன்மை தேர்வுக்கு வழிகாட்டும் பயிற்சி

தினத்தந்தி
|
11 Nov 2022 6:45 PM GMT

முதன்மை தேர்வுக்கு வழிகாட்டும் பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட படிப்பு வட்டத்தில் படித்து டி.என்.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு தயாரிப்பிற்கு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் பேசியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் 72 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுவாக தேர்வர்களுக்கு சமூக அக்கறையும், பொறுப்பும் தேவை. எந்த பிரச்சினை குறித்தும் நடுநிலையான பார்வை தேர்வர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் முதன்மை தேர்வு அணுகுமுறை குறித்தும், தேர்வு மதிப்பீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும், தேர்வில் விடையளிக்கும் திறன் குறித்தும், முதன்மை தேர்விற்கு பயிற்சி செய்யும் நடைமுறை குறித்தும் கலெக்டர் விளக்கமளித்தார்.

இதில், மாவட்ட திட்ட இயக்குனர் .வானதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணி கணேஷ், ராஜலெட்சுமி, தாசில்தார் மணிவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்