< Back
மாநில செய்திகள்
வேளாண் அலுவலர்களுக்கு புத்தூட்ட பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

வேளாண் அலுவலர்களுக்கு புத்தூட்ட பயிற்சி

தினத்தந்தி
|
31 July 2022 4:50 PM GMT

வேளாண் அலுவலர்களுக்கு புத்தூட்ட பயிற்சி நடைபெற்றது.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் பயிர் மதிப்பீட்டாய்வு மற்றும் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு புத்தூட்ட பயிற்சி சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் நடைபெற்றது. புள்ளியியல் துணை இயக்குனர் பாண்டி தலைமை தாங்கினார். கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ரவி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் பயிற்சியை தொடங்கி வைத்தார். சிவகங்கை பயிர் காப்பீட்டு திட்ட உதவி இயக்குனர் மேரி ஐரின் ஆக்னிட்டா, தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியினை மாவட்ட புள்ளியியல் அலுவலர் சரவணகுமார் வழங்கினார்.

பின்னர் புள்ளியியல் உதவி இயக்குனர் ரவி கூறியதாவது:-

ஒவ்வொரு பசலி ஆண்டும் உணவு உற்பத்தி, விளைச்சல் விவரங்களை துல்லியமாக கணிக்க பயிர் அறுவடை ஆய்வின் முக்கியத்துவத்துவம் குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை கணக்கிடவும், உணவு உற்பத்தி திறனை மேம்படுத்த திட்டம் வகுக்கவும், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யவும் பயிர் அறுவடை பரிசோதனை அவசியமாகும். இதற்காக ஒவ்வொரு பசலி ஆண்டும் காரிப், ராபி மற்றும் கோடை பருவங்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பருவங்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக பொருளியல், புள்ளியியல் துறை மூலமாக கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மூலமாக பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்