< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
20 July 2022 4:58 PM GMT

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் வட்டார வள மையம் சார்பில் திருப்பத்தூர் அருகே தெம்மாப்பட்டு செந்தமிழ் ஆரம்ப பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இல்லம் தேடி கல்வி திட்ட திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியை சந்தா ஜெயமேரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் மீனா வரவேற்றார். இல்லம் தேடி கல்வி திட்ட தேவகோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, தலைமைஆசிரியை குணவதி, ஆசிரியர் சீமோன், ஆரோக்கியநாதன், இல்லம் தேடி கல்வி திட்ட சிவகங்கை கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் பயிற்சியளித்தனர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஆசிரிய பயிற்றுனர் தனபாண்டி உறுதிமொழி வாசிக்க தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சின்னத்துரை நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் அழகு ராணி செய்திருந்தார்.


மேலும் செய்திகள்