< Back
மாநில செய்திகள்
கடலூரில்  கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி  மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
25 May 2022 4:32 PM GMT

கடலூரில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியை மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் சார்நிலை அலுவலர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. பயிற்சியை மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். துணை பதிவாளர் அன்பரசு வரவேற்றார்.

பயிற்சியில் பொது வினியோக திட்டம், நிதி மற்றும் வங்கியியல், அரசின் சிறப்பு திட்டங்கள், சட்டபூர்வ பணிகள், விற்பனை மற்றும் நுகர்வோர் கூட்டுறவு, தகவல் அறியும் உரிமைச்சட்டம், யோகா மற்றும் தமிழ் ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் துணை பதிவாளர்கள் துரைசாமி (கடலூர்), ஜீவானந்தம் (விருத்தாசலம்), சீனிவாசன் (சிதம்பரம்), பொது வினியோக திட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், டான்பெட் துணை பதிவாளர் சுரேஷ்குப்தா, கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் கூட்டுறவுத்துறை, வீட்டுவசதித்துறை, மீன்வளத்துறை, பால்வளம் ஆகிய துறைகளில் இருந்து சார்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்