< Back
மாநில செய்திகள்
கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
4 Oct 2023 11:36 AM IST

கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை தினந்தோறும் ஏராளமானோர் மின்சார ரெயில் மூலம் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

மேலும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வந்த ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி ஒவ்வொரு ரெயிலாக இடைவெளி விட்டு மாற்று தண்டவாள பாதையில் இயக்கப்பட்டது.

காலை நேரம் என்பதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினார்கள். இதை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 9.30 மணியளவில் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்