< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
திருச்சி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்
|29 March 2023 12:15 AM IST
திருச்சி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மானாமதுரை-சூடியூர் ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதற்காக அந்தபாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.16849/16850) வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். அதாவது, இந்த ரெயில் மானாமதுரை-ராமேசுவரம் இடையே இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளது.