< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ரெயில் மோதி ஒப்பந்த பணியாளர் பலி
|23 April 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் ெரயில் மோதி ஒப்பந்த பணியாளர் பலியானார்.
வேலூர் மாவட்டம் ஏலகிரி பாலன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் பிரபாகரன் (வயது 32). ரெயில்வே ஒப்பந்த பணியாளர். தற்போது தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே 2-வது தண்டவாளப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஒப்பந்த ஊழியராக பிரபாகரன் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி பயணியர் விரைவு ரெயில் இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.