< Back
மாநில செய்திகள்
ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று திண்டுக்கல் வரை இயக்கப்படும்; அதிகாரி தகவல்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று திண்டுக்கல் வரை இயக்கப்படும்; அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
12 Jun 2023 3:11 AM IST

ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (திங்கட்கிழமை) திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (திங்கட்கிழமை) திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16845) இன்று (திங்கட்கிழமை) திண்டுக்கல் முதல் நெல்லை வரை ரத்து செய்யப்படுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே ரெயில் இயக்கப்படும்.

மேலும் நெல்லையில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846) நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை முதல் திண்டுக்கல் வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் திண்டுக்கல் முதல் ஈரோடு வரை மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது.

கோவை-நாகர்கோவில் ரெயில்

கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16322) நாளை (செவ்வாய்க்கிழமை) திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) நாளை நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல் வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து கோவை வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல் சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்பட்டு வரும் மைசூரு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16236) இன்று விருதுநகரில் இருந்து தூத்துக்குடி வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் தூத்துக்குடி- மைசூரு (16235) எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை தூத்துக்குடியில் இருந்து விருதுநகர் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த ரெயில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு மைசூரு சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்