ராமநாதபுரம்
ராமாயண ரத யாத்திரை ரெயில் 500 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டது
|ராமேசுவரத்தில் இருந்து ராமாயண ரத யாத்திரை ரெயில் 500 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டது.
ராமேசுவரம்
டெல்லியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி அன்று ராமாயண ரத யாத்திரை ரெயில் சுமார் 500 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டது. ெரயிலை மத்திய ெரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் தொடங்கி வைத்தார். ராமாயண கதைகள் தொடர்புடைய அயோத்தி நேபாளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 இடங்களுக்கு செல்லும் இந்த ரெயில் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்தது. இந்த ெரயிலின் பெட்டிகளின் எழுதப்பட்டிருந்த ராமாயண கதைகள் தொடர்புடைய பல்வேறு ஓவியம் மற்றும் புகைப்படங்களை ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்தனர். நேற்று மாலை ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது.வருகிற 8-ந் தேதி இந்த ரத யாத்திரை ரெயில் பயணம் டெல்லியில் முடிவடைவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த ராமாயண ரத யாத்திரை ரெயிலில் பயணம் செய்யும் தனி நபர் ஒருவருக்கு ரூ.71,820 கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. அதுவே இரண்டு அல்லது மூன்று நபர்களாக சென்றால் தலா ஒருவருக்கு ரூ.62,370 கட்டணமும், 5வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.56,700 டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் ரெயில் பயணம் மட்டுமல்லாது ஓட்டல்களில் ஏசி ரூமில் தங்குவதற்கான ஏற்பாடு, ரெயில்களில் சாப்பாடு, தங்குமிடங்களில் சாப்பாடு, புனித தலங்களை பார்வையிட ஏ.சி. பஸ் பயணம், பயணக் காப்பீடு, சுற்றுலா வழிகாட்டுதல் உள்ளிட்டவையும் அடங்குவதாக கூறப்படுகிறது.