சிவகங்கை
மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்
|காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்து உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்து உள்ளது.
கோரிக்கை
காரைக்குடி தொழில் வணிக கழக நிர்வாகிகள் மதுரை கோட்ட ரெயில்வே துறை மேலாளரை நேரில் சந்தித்து காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன், இணைச் செயலாளர் சையது ஆகியோர் கூறியதாவது:-
காரைக்குடியில் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து வருவதை தவிர்க்க புதிய நடை மேம்பால பணிகளை விரைவு படுத்த வேண்டும். நடைமேடைகளில் ெரயில் பெட்டி எண்ணை தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் லைட் போர்டுகளை வைக்க வேண்டும். வழக்கமாக இருந்து வரும் முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டரையும் தினசரி டிக்கெட் வழங்கும் கவுண்ட்டரையும் தனித்தனியாகவே செயல்படசெய்ய வேண்டும்.
நீட்டிப்பு
காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு தினசரி ெரயிலை இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர் செல்லும் அயோத்யா எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்குடியில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.