< Back
மாநில செய்திகள்
வாஸ்து பிரகாரம் சீரமைக்க இடித்தபோது பரிதாபம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாஸ்து பிரகாரம் சீரமைக்க இடித்தபோது பரிதாபம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி

தினத்தந்தி
|
7 Feb 2023 2:42 PM IST

கனகம்மாசத்திரம் அருகே வாஸ்து பிரகாரம் வீட்டை இடித்து சீரமைக்கும் போது சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியானார்.

கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 47) விவசாயி. இவர் வாஸ்து பிரகாரம் வீட்டை சீரமைக்க நினைத்து கடந்த மாதம் 28-ந் தேதியன்று வீட்டை கடப்பரை கொண்டு இடித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒருபகுதியை இடித்த போது மேலே இருந்த சுவர் சரிந்து செல்வம் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி அலமேலு அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 65). இவரது மனைவி சுமதி (52), மகன் சதீஷ் (35), மகள் விஷ்ணு பிரியா (31). அதே பகுதியை சேர்ந்த தனது தம்பி சீனிவாசன் (52), தம்பி மனைவி சுசீலா (49) ஆகியோரை அழைத்து கொண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த குன்னத்தூர் பகுதியில் கார் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்