< Back
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம்: செல்போன்களில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்..?

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம்: செல்போன்களில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்..?

தினத்தந்தி
|
25 May 2024 11:34 PM GMT

ஆசிரியர் லிங்கத்துக்கு கடன் கொடுத்தவர்களில் சிலர் முக்கிய புள்ளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் லிங்கம் (வயது 44). அவரது மனைவி ஆசிரியை பழனியம்மாள் (47), மகள் ஆனந்தவள்ளி (24), மகன் ஆதித்யா (13) பேத்தி 3 மாத குழந்தை சஷ்டிகா என குடும்பத்தில் இருந்த 5 பேரும் கடந்த 23-ந்தேதி வீட்டில் பிணமாக கிடந்தனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் தொல்லையால் குடும்பத்தில் உள்ள 5 பேரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் யாராவது ஆசிரியர் லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் லிங்கம் வீட்டில் இருந்து போலீசார், 3 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அது லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ஆனந்தவள்ளி ஆகியோர் பயன்படுத்தியது என்பது தெரியவந்துள்ளது. லிங்கம் பயன்படுத்தி வந்த செல்போனில் இருக்கும் வாஸ்ட்அப் பதிவுகளை போலீசார் ஆராய்ந்த போது சிலர் கடன் தொகையை திருப்பி கேட்டு அனுப்பி இருந்த மெசேஜ்கள் இருந்தன. இதனை கொண்டு ஆசிரியர் லிங்கத்துக்கு யார்? யார்? கடன் கொடுத்தார்கள் என்ற பட்டியலை போலீசார் முதல் கட்டமாக தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் லிங்கத்துக்கு கடன் கொடுத்தவர்களில் சிலர் முக்கிய புள்ளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள், அந்த பணத்தை ஆசிரியர் லிங்கம் திருப்பி கொடுத்தாரா அல்லது அதற்கு பதில் ஏதாவது நிலத்தை எழுதி கொடுத்தாரா? என்ற விவரம் குறித்தும் விசாரணை நடக்கிறது.

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 20 பேர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்