< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
திருமங்கலம் அருகே பரிதாபம் - சாப்பிடும் போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு
|12 Jan 2023 2:04 AM IST
திருமங்கலம் அருகே சாப்பிடும் போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் ஜெயபாண்டி (வயது 29). அரிசி வியாபாரி. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவில், ஜெயபாண்டி தன் வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென விக்கல் ஏற்பட்டது. தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லை. தொடர்ந்து விக்கல் அதிகமானதால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஜெயபாண்டி இறந்து விட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.