< Back
மாநில செய்திகள்
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விபரீதம்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விபரீதம்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 May 2022 4:28 PM IST

பெரியபாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவருக்கும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த சினேகா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கவுசிக் என்ற 1½ வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில், விஜய்-சினேகா தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் கோபித்து கொண்டு சினேகா தனது தாய் வீடான சென்னை கண்ணகி நகருக்கு சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டார்.

இதனால் மனவிரக்தியுடன் இருந்த விஜய் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் மீனாட்சி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்து பலியான விஜயின் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்