< Back
மாநில செய்திகள்
மணலியில் சோகம் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மணலியில் சோகம் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
25 Nov 2022 2:58 PM IST

காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மணலி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 22). இவர், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காதலித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய காதல் மனைவி ராஜேஸ்வரி, ராஜனை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ராஜன், தனது தாயுடன் மணலியில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராஜன், மனைவி வீட்டாரிடம் போனில் பேசி விட்டு தூங்க சென்றார். நேற்று காலையில் எழுந்த ராஜன், திடீரென வீட்டின் சமையல் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்