திருவாரூர்
வயல் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்
|வயல் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்
வலங்கைமான்:
மயானத்திற்கு சாலை வசதி இ்ல்லாததால் வயல் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம் உள்ளது.
மயானம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா களத்தூர் ஊராட்சி வடக்கு ஆதிதிராவிட தெருவில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் மயானம் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இங்கு யாராவது இறந்தால் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல களத்தூர் வயல் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. இந்தநிலையில் களத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது93) என்பவர் இறந்தார். இவரது உடலை களத்தூர் வயல் வழியாக மயானத்திற்கு அப்பகுதி மக்கள் தூக்கி சென்றனர்.
சாலைவசதி வேண்டும்
மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.