சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சேவை சீரானது...!
|சென்னையில் உள்ள சுரங்க பாதைகள் அனைத்திலும் முழுவதுமாக மழை நீர் தேங்கி இருந்தது.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த கனமழையின்போது சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் சென்னையில் உள்ள சுரங்க பாதைகள் அனைத்திலும் முழுவதுமாக மழை நீர் தேங்கியது. இதனால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் தேங்கிய மழை நீர் மற்றும் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன. எனவே மொத்தம் உள்ள 22 சுரங்க பாதைகளின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து சீராகியுள்ளது.