சென்னை
மக்களை தேடி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
|போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் மக்களை தேடி விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. எனினும் பின்னால் அமர்ந்து செல்லும் பலர் இந்த உத்தரவை முறையாக கடைபிடிப்பது இல்லை. தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. போலீசார் ஆங்காங்கே வாகன ஓட்டிகளை மடக்கி அபராத வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்ற பின்னர் அபராத நடவடிக்கைகளுக்கு பதிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் மக்களை தேடி விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சென்னை வேப்பேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.