< Back
மாநில செய்திகள்
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில்  போக்குவரத்துக்கு தடை
வேலூர்
மாநில செய்திகள்

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
31 May 2022 11:29 AM GMT

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் புதன்கிழமை தொடக்கப்பட உள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மாற்று வழித்தடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் புதன்கிழமை தொடக்கப்பட உள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மாற்று வழித்தடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே மேம்பாலம்

தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட மங்களூரு- விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும். இதனால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதை சரிசெய்ய ரெயில்வே மேம்பாலத்தை பழுது பார்க்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது.

எனவே காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

மாற்றுப்பாதை

காட்பாடியில் இருந்து பாகாயம் மார்க்கமாக செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குடியாத்தத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக டெல் வரை இயக்கப்படும்.

தடம் எண் 16 பி, ஏ, 16டி, 16டி பஸ்கள் அனைத்தும் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் வழியாக இயக்கப்படும்.

தடம் எண்.16 இ, 16எப், ஏ, 16எப், பி ஆகிய தட எண் பஸ்கள் பள்ளத்தூர், பரதராமிக்கு வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து இயக்கப்படும்.

16 எம், 16 ஆர் தட பஸ்கள் முறையே மகாதேவமலை, ரகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து இயக்கப்படும்.

தடம் எண் 20 ஏ, 20 ஏ, பி, 20 பி, ஏ ஆகிய வழித்தடங்கள் வி.ஐ.டி. ஈ.பி. கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 20 ஆர், 20 எம் பொன்னை புதூர்- காட்பாடி தெங்கால்-காட்பாடி ஆகிய இரு தட பஸ்களும் வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து இயக்கப்படும்.

தடம் எண் 14 பஸ் சேர்க்காடு-காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு இடையே இயக்கப்படும்.

திருப்பதி செல்லும் பஸ்கள்

வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி, சித்தூர் பஸ் நிறுத்தம், வி.ஐ.டி., ஈ.பி. கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், முத்தரசிகுப்பம், சித்தூர் வழியாக இயக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்