< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
30 Jun 2023 5:13 PM IST

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகளை வாங்க ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டு சேலைகள் வாங்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் காஞ்சீபுரத்தில் குவிந்தனர்.

விரைவில் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் நேற்று வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் பட்டு சேலை எடுப்பதற்காக ஒரே நாளில் குவிந்த பொதுமக்களால் காஞ்சீபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிக அளவிலானோர் வருகைதந்து பட்டு சேலைகளை வாங்கிச்சென்றனர்.

வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதன் காரணமாக காந்தி சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலை ஏற்பட்டது.

மேலும், தேரடி மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இருந்த நிலையிலும், சாலையில் நிறுத்தப்படும் அந்த வாகனங்களினால் போக்குவரத்து சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்