திண்டுக்கல்
தாண்டிக்குடியில் சினிமா படப்பிடிப்பு வாகனங்களை சாலையில் நிறுத்தி இடையூறு
|தாண்டிக்குடியில் சினிமா படப்பிடிப்பு வாகனங்களை சாலையில் நிறுத்தி இடையூறு செய்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி பகுதியில் கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தாண்டிக்குடி போலீஸ் நிலையம் அருகே வத்தலக்குண்டு-தாண்டிக்குடி மலைப்பாதையில் சினிமா படப்பிடிப்பு கேரவன் வாகனங்களை ஆங்காங்கே சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த அரசு, தனியார் பஸ்கள் தாண்டிக்குடி ஊருக்குள் செல்லாமல் கப்பாலாபட்டி மலைக்கிராமம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோல் மற்ற வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சினிமா படப்பிடிப்பு குழுவிடம் தெரிவித்தால் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யும் சினிமா படப்பிடிப்பு குழு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.