< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரக்கிளைகள்; போக்குவரத்து பாதிப்பு
|24 Aug 2022 10:05 PM IST
பலத்த காற்றுடன் பெய்த மழையால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
தமிழக-கேரள எல்லை பகுதிகளான கூடலூர், லோயர்கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக மாதா கோவில் அருகே பெரிய மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.
இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, தொழிலாளர்கள் மூலம் மலைப்பாதையில் விழுந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மரக்கிளைகள் முறிந்து விழுந்தபோது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.