< Back
மாநில செய்திகள்
நடுரோட்டில் கிடக்கும் மரக்கிளைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நடுரோட்டில் கிடக்கும் மரக்கிளைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

தினத்தந்தி
|
10 Aug 2022 8:35 PM IST

வத்தலக்குண்டுவில் நடுரோட்டில் கிடக்கும் மரக்கிளைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நேற்று நடந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதையொட்டி வத்தலக்குண்டு காந்திநகர், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின்சார வயர்களை உரசியபடி இருந்த மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டினர்.

இந்தநிலையில் காந்திநகர் மெயின் ரோட்டில் வெட்டிய மரக்கிளைகளை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே நடுரோட்டில் போட்டு சென்ற மரக்கிளைகளை, மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்