< Back
மாநில செய்திகள்
நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
21 May 2023 7:06 PM GMT

களக்காட்டில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

களக்காடு:

சேரன்மாதேவியில் இருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஜல்லிகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி களக்காடு அண்ணாசிலை பஸ்நிலையத்தில் காமராஜர் சிலை அருகே உள்ள திருப்பத்தில் வந்த போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. பஸ்சும், லாரியும் ஒதுங்கி சென்று கொண்டிருந்த போது, திடீர் என லாரியில் உள்ள பேட்டரி பழுதானது. இதனால் நடுரோட்டில் லாரி நின்றது. இதனைதொடர்ந்து பஸ்சும் செல்ல முடியாமல் நின்றது. இதையடுத்து அங்கு போக்குவரத்து தடைபட்டது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் நாங்குநேரி துைண போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. இதற்கிடையே லாரியில் பழுதான பேட்டரியை அகற்றி விட்டு, மாற்று பேட்டரி பொருத்தப்பட்டு, லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின் 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்