< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
|14 Feb 2023 11:17 AM IST
நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ள
சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணி காரணமாக அப்பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்த போக்குவரத்து மாற்றம் நல்ல முறையில் செயல்பட்டது. எனவே மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.