< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு
கரூர்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு

தினத்தந்தி
|
27 Oct 2022 12:10 AM IST

சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இப்பகுதியில் தெற்கு நோக்கிச் செல்ல 6 வழிகளும் வடக்கு நோக்கி செல்ல 6 வழிகளும் உள்ளன. தெற்கு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிக்கு பணம் கட்டிவிட்டு கடக்கும்போது ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவிற்கு வழிவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் 6 வழிப் பாதைகளில் செல்லும்போது சுங்கச்சாவடியை கடந்தவுடன் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இடம் உள்ளது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆகின்றது. சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுங்கச்சாவடி அருகில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றியோ அல்லது இரண்டு, மூன்று வாகனங்கள் செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்தி தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்